இந்தியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை ருசிக்குமா ஆஸ்திரேலியா? நாளை கடைசி போட்டி
- 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
- தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும்.
பெங்களூரு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் 2 வீரர்களுக்கு முதல் 4 டி20-யில் வாய்ப்பு வழங்காததால் நாளைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஆகியோர் மட்டும் இந்த தொடரில் விளையாடாமல் உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒரு போட்டியிலாவது விளையாடி உள்ளனர். எனவே இருவரும் அடுத்த போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.