கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோகித் சர்மா புதிய சாதனை

Published On 2022-10-27 12:09 GMT   |   Update On 2022-10-27 12:09 GMT
  • ஒட்டு மொத்தமாக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார்.
  • யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.

சிட்னி:

2022 டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாக முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். அவர் 63 சிக்சர் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ரோகித் அதிரடியை காட்டி சிறப்பாக விளையாடினால் 50 சிக்சர்களை அடிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News