கிரிக்கெட் (Cricket)
தென் ஆப்பிரிக்கா 'லீக்' தொடர்: பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு 5-வது வெற்றி
- முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.
- பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிடோரியா கேப்பிடல்ஸ் அணி 52 ரன் வித்தியாசத்தில் எம்.ஐ. கேப்டவுனை வீழ்த்தியது.
முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டது. பிரிட்டேரியா கேப்பிடல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும்.
இன்றைய போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பாரல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர்கிங்ஸ்-டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. கலர்ஸ் தமிழ் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது.