வழிபாடு

18-ம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடி கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை

Published On 2022-08-13 05:05 GMT   |   Update On 2022-08-13 05:05 GMT
  • சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
  • சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இந்த கோவிலின் காவல் தெய்வமான 18-ம் படி கருப்பணசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆடி பவுர்ணமியையொட்டி நேற்றிரவு 18 படிகளுக்கும் பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி மதுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், கடும் விரதங்களை கடைபிடித்தும், சந்தனக் குடங்களை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைதொடர்ந்து ராஜகோபுரத்தின் திருநிலை கதவுகளில் சந்தனம் குடம், குடமாக சாத்தப்பட்டது.

பின்னர் நிலை மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதையடுத்து 18-ம் படி கருப்பு கதவு திறக்கப்பட்டு படிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News