ஆன்மிகம்
ஹாங்காங்கில் நடந்த பங்குனி உத்திர விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடம் சுமந்த காட்சி.

ஹாங்காங் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம்: பால்குடம்-காவடியுடன் தமிழர்கள் வழிபாடு

Published On 2017-04-12 12:09 IST   |   Update On 2017-04-12 12:09:00 IST
ஹாங்காங்கில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு வாழும் தமிழர்கள் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள்.
ஹாங்காங் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பால்குடம் மற்றும் காவடியுடன் தமிழர்கள் வழிபாடு செய்தனர்.

ஹாங்காங்கில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு வாழும் தமிழர்கள் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார்கள்.

அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதையொட்டி 21 தட்டுகளில் முருகனுக்கு பக்தர்கள் சீர்வரிசை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பக்தர்கள் காவடிகள் மற்றும் பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பால், சந்தனம் மற்றும் பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தனர். அதில் தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

பலவகையான இனிப்புகளுடன் பாரம்பரிய விருந்து நிகழ்ச்சி நடந்தது.

Similar News