ஆன்மிகம்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் பட்டாபிஷேக விழா
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அயோத்தியாப்பட்டணம் ராமர்கோவிலில் நேற்று ராமருக்கும், சீதாலட்சுமிக்கும் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி நேற்று காலை கோமாதா பூஜை நடந்தது. பெண்கள் பால்குடத்துடன் அயோத்தியாப்பட்டணம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதை தொடர்ந்து ராமர்-சீதாலட்சுமி திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா நடந்தது. இதை சுதர்சன பட்டாச்சாரியார், ஸ்ரீராம் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாமி வீதி ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் பெ.சுரேஷ்குமார், தக்கார் மு.முருகன், கட்டளைதாரர் செல்வ மாளிகை மாணிக்கம் மற்றும் கோதண்டராமசாமி இறையருள் நற்பணி மன்றத்தினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.