வழிபாடு
ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் இசைப் படிக்கட்டு

ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் இசைப் படிக்கட்டு

Published On 2022-04-29 10:17 IST   |   Update On 2022-04-29 10:17:00 IST
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் நுழைவு வாசலில் நந்தி சிலையின் அருகே அமைந்துள்ள பலிபீடத்தின் படிகள்தான், இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் திருக்கோவில், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விருபாட்சீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் இசை எழுப்பும் கற்தூண்கள் இருப்பதைக் காண முடியும்.

அந்த வகையில் அமைந்ததுதான், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள ‘இசைப் படிக்கட்டுகள்.’ ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் நுழைவு வாசலில் நந்தி சிலையின் அருகே அமைந்துள்ள பலிபீடத்தின் படிகள்தான், இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரம் என, ‘சரிகமபதநி’ என்னும் ஏழு ஸ்வரங்களையும் வெளிப்படுத்துகின்றன.

Similar News