வழிபாடு

கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம். (உள்படம்: அம்பாள்களுடன் பொலிந்து நின்றபிரான்)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மே 1-ந் தேதி தேரோட்டம்

Published On 2023-04-24 06:36 GMT   |   Update On 2023-04-24 06:36 GMT
  • 27-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.
  • தினமும் உற்சவர் பொலிந்து நின்றபிரான் வீதி உலா நடக்கிறது.

நவதிருப்பதி கோவில்களில் 9- திருப்பதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலையில் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் நடந்தது. அதிகாலை 4.45 மணிக்கு திருமஞ்சனம், காலை 5.15 மணிக்கு தீபாராதனை, 5.45 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.

காலை 6.15 மணிக்கு அம்பாள்களுடன் பொலிந்து நின்றபிரான் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதிகளில் சுற்றி வந்து காலை 7.15 மணிக்கு சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவில் எம்பெருமானார் ஜீயர், செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவலமணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உற்சவர் பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.

வருகிற மே. 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News