வழிபாடு

காந்திநகரில் அத்திமர வெங்கடேச பெருமாளுக்கு ஆராதனை வைபவம் நாளை நடக்கிறது

Published On 2023-02-11 14:12 IST   |   Update On 2023-02-11 14:12:00 IST
  • இந்த சிலையில் தசாவதாரங்கள் பதிய பெற்றுள்ளது.
  • சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

காட்பாடி காந்திநகரில் ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் உள்ளது. இங்கு 8.2 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் ஒரே அத்திமரத்தால் வெங்கடேச பெருமாள் சிலை புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையில் தசாவதாரங்கள் பதிய பெற்றுள்ளது.

இந்த வெங்கடேச பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேக ஆராதனை வைபவம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சாமிக்கு திருக்கல்யாண வைபவமும், பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஆராதனை வைபவ விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், மாநகராட்சி கவுன்சிலர் கே.அன்பு உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

ஏற்பாடுகளை திருமண மண்டப உரிமையாளர் டி.பாலமுரளி, சவுமியா ஆகியோர் செய்துள்ளனர்.

Similar News