வழிபாடு

திருமலை நாதநீராஞ்சன மண்டபத்தில் அயோத்தியா காண்டம் பாராயணம் தொடக்கம்

Published On 2023-07-10 11:48 IST   |   Update On 2023-07-10 11:48:00 IST
  • முதல் பதிப்பு திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் தொடங்கியது.
  • பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலக மக்கள் நன்மைக்காக திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்த அயோத்தியா காண்டம் அகண்ட பாராயணத்தின் முதல் பதிப்பு திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சியில் தர்மகிரி வேதவிஞ்ஞான பீடம், எஸ்.வி.வேதிக் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைகழகத்தைச் சேர்ந்த வேத பண்டிதர்கள் பங்கேற்றனர். தர்மகிரி பீடத்தைச் சேர்ந்த ராமானுஜசாரியுலு, மாருதி, அனந்த கோபாலகிருஷ்ண ஆகியோர் அயோத்தியா காண்டத்தில் 1 முதல் 3 வரையிலான அத்தியாயங்களில் இருந்து அனைத்துச் சுலோகங்களின் பாராயணத்தை வழங்கினர். முன்னதாக அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர் உதய் பாஸ்கர் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த நாகராஜ் குழுவினர் இன்னிசை சங்கீர்த்தனங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News