வழிபாடு

கோவை இருகூரில் அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-05-24 07:34 GMT   |   Update On 2023-05-24 07:34 GMT
  • கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.
  • காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அழகு நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதையடுத்து அந்த கோவிலை தற்போது இருகூர் பேரூராட்சி தலைவராக உள்ள சந்திரன் முயிற்சியால் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர் பூஜை, முதலாம்கால வேள்வியும், இன்று (புதன்கிழமை) 2-ம் கால வேள்வி, சிவகணநாதர் வேள்வி விஷேச வழிபாடு, சூரிய சந்திர வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, மலர் அர்ச்சனை வழிபாடு, காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெறும். நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு 3-ம் கால வேள்வி, திரவிய வேள்வி ஆகியவை நடக்கிறது.

அன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இருகூர் பேரூராட்சி தலைவர் சந்திரன் தலைமையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்குதல், குருமகா சந்நிதானம் அருளுரை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு செயலாளர் உச்சான் வீடு சின்னதம்பி, தலைவர் ஆண்டாள் கருப்பண்ணன், ஆண்டாள் காந்தி சர்க்கரை செல்வராஜ் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News