வழிபாடு
இடையூறு நீங்க தேங்காய் உடைக்கலாம்
- மூன்று கண்கள் கொண்டதாக இருப்பதால் தான், இதனை முக்கண்ணனின் அம்சம் என்கிறார்கள்.
- சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.
எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் இறைவனின் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்வது தேங்காய்தான். நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக்கூடியது தேங்காய் என்று சொல்வார்கள்.
கண்ணேறு படாமல் இருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி, சம்பந்தப்பட்டவர்களின் தலையைச் சுற்றி அந்தத் தேங்காயைச் சிதறு காயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தெய்வங்கள் திருவீதி உலா வந்து, மீண்டும் கோவிலுக்குள் செல்லும் பொழுது, தேங்காயை எடுத்து சிலைகளைச் சுற்றி, அந்தத் தேங்காயை வீதியில் உடைப்பார்கள்.
மூன்று கண்கள் கொண்டதாக இருப்பதால் தான், இதனை முக்கண்ணனின் அம்சம் என்கிறார்கள். சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.