சென்னிமலை முருகன் கோவிலின் தனிச்சிறப்புகள்
- முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார்.
- முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.
எல்லாம் வல்ல சென்னிமலை முருகப்பெருமானுடைய திருத்தலத்திலே தைப்பூச தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. குன்று இருக்கும் இடம் மெல்லாம் குமரன் இருப்பான் என்று கோழையற்றோர் வந்து வழிபடும் திருத்தலத்திலேயே நமது சென்னிமலை முருகன் திருத்தலம் மிகவும் தொன்மையானதும், பல சிறப்புகளை கொண்டது ஆகும்.
நமது சென்னிமலை திருத்தலம் சிரகிரி என்ற பெயரோடு ஆதிகாலத்திலேயே விளங்கியதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மலை 4 யுகத்திலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
அப்படியாக ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் இப்படி எண்ணற்றோர் வந்து இங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்கள் என ஸ்தல புராணங்களிலே குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
இந்த கலியுகத்தில் தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டதாகவும். சிரகிரி என்ற பெயரில் இருந்து தற்போது சென்னிமலை என்று வணங்கப்படுகின்றது. இங்கு, சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாக விழா, ஆடி மாதம் பாலாபிஷேக விழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா அடுத்தது கார்த்திகை மாதத்தில் தீபம் வைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி, மார்கழி பூஜை விழா, தை மாதம் பூச நட்சத்திரம் பிரம்மோற்சவம், அது 15 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பூச நட்சத்திரத்திலே மகர லக்கனத்தில் முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி எல்லோருக்கும் 2 நாட்கள் அருளாசியை செய்வார். தைப்பூச விழா ரேவதி நட்சத்திரம் சப்தமி திதியில் கொடி ஏற்றம் நடைபெற்று அதற்கு பிறகு காலை, மாலை 2 நேரமும் பல்வேறு மண்டப கட்டளைகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் சாமி எழுந்தருளி அந்தந்த மண்டபத்திலே பூஜைகள் எல்லாம் நடைபெற்று ஒவ்வொரு கிராமத்தைச் சார்ந்தவர்கள், ஒவ்வொருத்தரும் வந்து சாமியை அந்த மண்டபத்திற்கு அழைத்து செல்வார்கள்.
அங்கு பூஜை ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும். 9 நாட்களுக்கு பிறகு தேரோட்டம் நிறைவு பெற்று தேர் நிலை சேர்த்தல் அடுத்ததாக பரிவேட்டை என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி அடுத்து மார்க்கண்டே தீர்த்தம் என்று அடிவாரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்திலே முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.
15-ம் நாளிலே தச்சாவரம் என்று சொல்லக்கூடிய மகா தரிசனம் அன்று காலையில் மகாபிஷேகம் நடைபெற்று பின்பு இரவு நான்கு ரத வீதிகளிலும் எழுந்தருளி மிகப் பெரிய தரிசன விழா மிகச்சிறப்பான முறையிலே நடக்கும்.
சென்னிமலை தரிசனம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் ஒரு பெரிய சிறப்பு. அந்த காலத்தில் இருந்தே மகாதரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர்.
தைபூச விழா நாட்களில் பக்தர்கள் எல்லோரும் கிராமங்களில் இருந்தும் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர். இப்படி பல சிறப்புகளை பெற்றது சென்னிமலை முருகப்பெருமானுடைய ஸ்தலம்.
சென்னிமலையில் கருவறையில் சுப்ரமணியரை சுற்றிலும் 8 கிரகங்கள் இருக்கின்றது செவ்வாய் நீங்களாக. இங்கு முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார். இங்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பு.
என்ன வியாதிகள் இருந்தாலும் இங்கு ரத்தம் சிந்தியாக்கப்பட்டு நோய்கள் சீரடையும், இங்கே வந்து செவ்வாய்கிழமை அங்காரகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது எண்ணற்ற சிறப்புகள் கிடைக்கும் என்று பெரிய சான்றோர்கள் எல்லாம் சொன்னது.
செவ்வாய்க்கிழமை தோறும் வந்து முருகனை தரிசனம் செய்யலாம். இங்கே தேவியர் வள்ளி, தேவசேனா இருவரும், உண்ணும் நேரம், உறங்கும் நேரம் போக மத்த நேரங்களில் முருகப்பெருமானை எல்லா நேரமும் நினைச்சுட்டு இருந்தார்கள் என்று புராணங்கள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முருகப்பெருமானை அடைய அமிர்த வள்ளி, சுந்தரவல்லி ஆக இருந்து இங்கே தவமிருந்ததாக சொல்லப்படுகின்றது.
அப்பேர்பட்ட சிறப்பான திருத்தலத்தில் தை பூச நாளில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் அதில் எண்ணற்ற அடியார்கள் எல்லோரும் காவடி எடுத்து விரதமிருந்து இங்கே வந்து முருகப்பெருமானுக்கு பிரார்த்தனையை செலுத்தி தரிசனம் பண்ணுவர்.