வழிபாடு

கோரிப்பாளையத்தை வலம் வந்த சந்தனக்கூடு

Published On 2022-10-14 11:57 IST   |   Update On 2022-10-14 11:57:00 IST
  • விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.
  • திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நேற்று தொடங்கி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

அதை தொடர்ந்து இரவு 11.55 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடைந்தது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News