குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 2-ந்தேதி புனித காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி நடைபெறுகிறது.
- 5-ம்தேதி திருக்கொடியிறக்கம் நடைபெறும்.
குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் முன்னோர் நினைவு திருப்பலி களிமார் பங்கு பணியாளர் ஜாண் அகஸ்டஸ் தலைமையில் கிறிஸ்து நகர் இணை பங்கு பணியாளர் ஜேக்கப் ஆஸ்லின் அருளுரை ஆற்றினார். விழாவை திருவழி பாட்டுக் குழுவினர் சிறப்பித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ் மாலை, நவநாள், திருக்கொடியேற்றம், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.கிறிஸ்து நகர் அருட் பணியாளர்கள் இல்ல அருட்பணியாளர் எ.செல்வராஜ் கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர் நடந்த திருப்பலியில் கோட்டார் கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் எட்வின் வின்சென்ட் தலைமையில் பெங்களூரு உயர்கல்வி அருள் பணியாளர் மரிய செல்வன் அருளுரை ஆற்றினார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
7-ம் திருவிழாவான வருகிற 2-ந்தேதி புனித காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோடிமுனை பங்கு பணியாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்கு பணியாளர் ஜோசப் அருளுரையாற்றுகிறார். 9-ம் நாள் இரவு 9 மணிக்கு வாண வேடிக்கையும், 10-ம் நாள் பெருவிழா திருப்பலி, காலை 10 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடைபெறும்.