வழிபாடு

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா வருகிற 6-ந்தேதி தொடக்கம்

Published On 2022-08-01 07:46 IST   |   Update On 2022-08-01 07:46:00 IST
  • 7-ந்தேதி புதுநன்மை விழா நடக்கிறது.
  • 13-ந்தேதி மரியன்னை மாநாடு நடக்கிறது.

கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி ஆலயத்துக்குள் மட்டும் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்தாண்டு ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா நடத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.

அதன்படி, புனித பரலோக மாத ஆலய திருத்தலத்தில் ஆக.6-ந்தேதி மாலை 6 மணிக்கு விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து 7-ந்தேதி காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு தேரடி திருப்பலி பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் எஸ். அந்தோணி சாமி தலைமையில் நடக்கிறது. விரதமிருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஆலய வளாகத்தில் புதிதாக ரூ.35 லட்சத்தில் நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கட்டப்பட்டுள்ள சி.ம.விசுவாசம் அசன மாளிகை, மற்றும் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஆகியவற்றை பிஷப் எஸ்.அந்தோணிசாமி திறந்து வைத்தார்.

அவருடன் திருத்தல அதிபர், பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெனால்டு அ.ரீகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News