சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து
- 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம்.
- நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி யைமுன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கோவில் கர்ப்ப கிரகம்,பலி பீடம், கொடிமரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோவில் முழுவதும் பச்சைக் கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 66,561 பேர் தரிசனம் செய்தனர்.18,647 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.