வழிபாடு

தீமிதி திருவிழா நடந்த போது எடுத்த படம்.

சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-05-21 12:53 IST   |   Update On 2023-05-21 12:53:00 IST
  • பரமேஸ்வரி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
  • இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மாமாகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் பெருமாள் கோவில் குளத்தில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க அக்ரஹாரம் வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News