வழிபாடு
பையூரில் 18 ஆண்டுகளுக்கு பின் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
- புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரமுள்ள பெரிய மரத்தேரை உருவாக்கினர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பொன்னியம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறும். தேர் முழுவதும் சிதிலம் அடைந்திருந்ததால் கடந்த பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கிராம மக்கள், விழா குழுவினர்கள் இணைந்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரமுள்ள பெரிய மரத்தேரை உருவாக்கினர். இதனை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் கடந்தவாரம் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நேற்று காலை நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மாட வீதியின் வழியாக அசைந்தாடி தேர் சென்றதை 18 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். இதனையொட்டி பாதுகாப்பு உள்பட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.