ராமன் புதூர் கார்மல் நகரில் புனித சந்தியாகப்பர் குருசடி அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது
- திருப்பலியை தொடர்ந்து பாராட்டு விழா நடக்கிறது.
- அர்ச்சிப்பு விழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
நாகர்கோவில் கார்மல் நகர் பங்கில் ராமன்புதூர் செயின்ட் மேரீஸ் தெருவில் புனித சந்தியாகப்பர் குருசடி 40 ஆண்டுகளுக்கு முன் இறைமக்கள் மற்றும் இளைஞர்களின் அர்ப்பணிப்பால் அமைக்கப்பட்டது.
பழமை வாய்ந்த இந்த குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டு, அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. அருட்பணியாளரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான ராஜன் குருசடியை அர்ச்சித்து புனிதப்படுத்துகிறார்.
வெள்ளமடம் அகத்திய முனி குழந்தைகள் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேவியர், மேலராமன்புதூர் பங்குத்தந்தை மரிய சூசை வின்சென்ட், இணையம் புத்தன்துறை பங்குத்தந்தை சகாய செல்வம், திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் ஆகியோர் ஜெபித்து, ஆசீர்வதித்து வைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நடக்கும் அன்பின் விருந்து நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் தொடங்கி வைக்கிறார்.
மாலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், 6 மணிக்கு அர்ச்சிப்பு விழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. திருப்பலிக்கு கோட்டார் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த் தலைமை தாங்குகிறார். வடசேரி பங்குத்தந்தை ஆன்றனி பெர்டிக் புரூனோ மறையுரையாற்றுகிறார்.
திருப்பலியை தொடர்ந்து பாராட்டு விழா நடக்கிறது. அர்ச்சிப்பு விழா ஏற்பாடுகளை கார்மல்நகர் பங்குத்தந்தை சகாயபிரபு வழிகாட்டுதலில், கார்மல்நகர் நிர்வாகக்குழுவினர், நண்பர்கள் சங்கத்தினர் மற்றும் செயின்ட் மேரிஸ் தெரு இறைமக்கள் செய்து வருகின்றனர்.