வழிபாடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
- ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
- பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.