வழிபாடு
வேளாங்கண்ணி அருகே சோழவித்யாபுரத்தில் சந்தனமாதா ஆலய திருவிழா
- இந்த ஆலய திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
- 29-ந்தேதி தேர்பவனி நடைபெற உள்ளது.
வேளாங்கண்ணி அருகே சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான தூய சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
முன்னதாக கொடி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றிவைத்தார். தொடர்ந்து சந்தன மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் திருப்பலி நடந்தது.
வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) மின் அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது. இதில் வேளாங்கண்ணி உதவி பங்குத் தந்தை டேவிட்தன்ராஜ் மற்றும் புனித அன்னாள் லூசன் சகோதரிகள், கிறிஸ்தவ சமுதாய தலைவர் மற்றும் நிர்வாககுழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.