ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை தொடக்கம்
- மண்டல மகர விளக்கு பூஜைகள் கொண்டாடப்படுவது வழக்கம்.
- மண்டல மகர விளக்கு பூஜை இந்த கோவிலில் நடந்தது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கக்கூடிய சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைகள் கொண்டாடப்படுவது வழக்கம். இதை தொடர்ந்து மண்டல மகர விளக்கு சீசன் தொடங்கி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து இக்கோயிலுக்கு இணையாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பேட்டை துள்ளல் உள்ள நிகழ்ச்சிகள் நடைபெற்று ஆராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் முதல் நிகழ்ச்சியாக மண்டல மகர விளக்கு பூஜை நேற்று வல்லபை ஐயப்பன் கோவிலில் நடந்தது. கோவில் தலைமை குருசாமி மோகன் தலைமை தாங்கினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டினர். இதைத்தொடர்ந்து குருசாமி மோகன் கூறும்போது, காப்பு கட்டிய ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
மண்டல மகர விளக்கு பூஜையானது சபரிமலையில் நடப்பது போன்று இங்கு நடைபெற்று இருக்கிறது என்றார் ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பா சேவை நிலையம், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.