வழிபாடு
கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- மே 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 7-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா புறப்பாடு நடைபெறுகிறது.
அடுத்த மாதம்( மே) 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தலும், மே 6-ந் தேதி தேரோட்டமும், 7-ந் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதிஉலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
8-ந் தேதி சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.