வழிபாடு
திருப்பதி கோவிலில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ரூ.116 கோடி
- ஜூன் மாதம் 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர்.
- மே மாதம் ரூ.109.99 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமும் 100 கோடியை தாண்டியது.
ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர். 11-ந் தேதி 92,238 பேரும், 10-ந் தேதி 88,626 பேரும், 17-ந் தேதி 87,762 பக்தர்களும், 25-ந் தேதி 87,407 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
18-ந் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.4 கோடியே 59 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.123.07 கோடி, பிப்ரவரியில் ரூ.114.29 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.120.29 கோடி, ஏப்ரலில் ரூ.144.12 கோடி, மே மாதம் ரூ.109.99 கோடி, ஜூன் மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.