வழிபாடு

வினை தீர்க்கும் வீரபத்திரர்

Published On 2022-06-21 11:21 IST   |   Update On 2022-06-21 11:21:00 IST
  • தட்சனை அழிப்பதற்காக, சிவபெருமானின் உக்கிரமான அருள்பார்வையில் இருந்து வெளிப்பட்டவர் வீரபத்திரர்.
  • வித்தியாசமான வீரபத்திரரின் ஆலயங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

திருப்பறியலூர் என்று புராணத்தில் அழைக்கப்படும் இடம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர். இங்குதான் வீரபத்திரரின் வாயிலாக தட்சனை, சிவபெருமான் தண்டித்த வீரட்டான தலம் இருக்கிறது. இங்கு கருவறையில் வீராட்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். கோவில் மகா மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் வீரபத்திரருக்கு சன்னிதி இருக்கிறது. மழு, கேடயம், மணி, கபாலம், சூலம், கதாயுதம், கத்தி தாங்கி காட்சி தரும் இவரை வணங்கினால், பயம் நீங்கி இன்பமான வாழ்வு வந்துசேரும்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூருக்கு தெற்கே 5 கிலோமீட்டரில் உள்ளது, பெரும்பேர்கண்டிகை. இந்த ஊரில் வீரபத்திரருக்கு கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வீரபத்திரர் தரிசனம் தருகிறார். அவருக்கு வடமேற்கில் பத்திரகாளிக்கு தனிச்சன்னிதி இருக்கிறது. இந்த ஆயத்தில் உள்ள சக்கரக் கிணறு தீர்த்தம் சிறப்புமிக்கது.

வீரபத்திரர் ஆலயங்களில் முக்கியமானது, அனுமந்தபுரத்தில் உள்ள திருக்கோவில். இது சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தென்கிழக்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அனுமந்தபுரம் உள்ளது. இங்கு காலையில் சிறுவயது தோற்றத்திலும், மதிய வேளையில் இளைஞனாகவும், மாலையில் முதியவர் வடிவிலும் வீரபத்திரர் காட்சி தருகிறார்.

Tags:    

Similar News