கால்பந்து

யூரோ கோப்பை கால்பந்து போட்டி: ஜார்ஜியா செக் குடியரசு போட்டி டிராவில் முடிந்தது

Published On 2024-06-23 01:23 GMT   |   Update On 2024-06-23 01:23 GMT
  • ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின.
  • இந்த 2 அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

குரூப் D பிரிவில் ஜார்ஜியா, செக் குடியரசு அணிகள் நேற்று இரவு மோதின. இந்த 2 அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இந்த ஆட்டம் 2 அணிகளுக்கும் மிக முக்கியமான ஆட்டமாக இருந்தது.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின. ஆட்டத்தின் முதல்பாதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜார்ஜியா வீரர் ஜார்ஜஸ் மிகுடாட்ஸே ஒரு கோல் அடித்தார். பின்னர் இரண்டாம் பாதியில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் ஷிக் 59 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

Tags:    

Similar News