பிள்ளைகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் கொடுமை மற்றும் அச்சுறுத்தல்
- கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
- கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
அச்சுறுதல் வேறு கிண்டல் பண்ணுதல் வேறாகும். பிள்ளைகள் விளையாடும் போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது.
விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள்.
ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும் போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.
கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.
அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
அடித்தல், இழுத்தல், பட்டப் பெயர் வைத்து அழைப்பது, அச்சுறுதல், மிரட்டிப் பணம் கறத்தல் அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
இன்றைய காலத்தில் குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.
'பள்ளிப் பிள்ளைகள் தானே! இவற்றிக்கு முகம் கொடுத்து தாண்ட வேண்டியவர்கள் தானே' என அலட்சியப்படுத்தக் கூடாது.
ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.