மழை நேரங்களில் வரும் ஜலதோஷம், இருமலுக்கு தீர்வு தரும் சித்தமருந்துகள்...
- தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள்.
- தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குளிர்காற்று வீசுவதாலும், உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து காணப்படும். ஆகவே சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றவை எளிதில் வருகிறது.
இதற்கு பயன்தரும் சித்தமருந்துகள்:
1) நிலவேம்பு குடிநீர் 60 மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் குணமாகும்.
2) இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. வீதம் காலை-மாலை இருவேளை குடிக்க வேண்டும். இதனால் சளித்தொந்தரவு குணமாகும்.
3) தாளிசாதி வடகம் மாத்திரைகள் இரண்டு எடுத்துக்கொண்டு காலை, மதியம், இரவு கடித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
பொதுவாக குளிர்காலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள். பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடியுங்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.