மாசி கருவாடு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா...
- கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன.
- உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.
கருவாடு என்பது குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் உணவாக மருத்துவ உலகம் கூறுகிறது. கருவாடுகளில் பல வகை இருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது, மாசி கருவாடு.
கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. பொதுவாக, மற்ற மீன்களை கருவாடு ஆக்க அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் உலர்த்துவது வழக்கம். ஆனால், சூரை மீன்களை கருவாடாக மாற்ற அவற்றை அவித்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர். இவ்வாறு கருவாடாக மாற்றும்போது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பளிங்கு போன்ற கண்ணாடி போல மாறி விடுகிறது. கருவாட்டு மணமும் இருக்காது. இது உடல் உறுப்புகள், தசைகளை பலமாக்கும் என்று கூறுகின்றனர்.
பொதுவாக, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் மாசி கருவாடு உணவு கொடுப்பது வழக்கமாகும். தற்போது இந்த வழக்கம் மறைந்து வருகிறது. மாசி மீன் கருவாடு உணவை சாப்பிடுவதால் பெண்களுக்கு சினைப்பை, கருப்பை பலப்படும் என்று பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.
திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை கொடுப்பதால் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் என்றும் கூறப்படுகிறது.