லைஃப்ஸ்டைல்

வேர்க்கடலை குழம்பு

Published On 2016-11-21 14:30 IST   |   Update On 2016-11-21 14:30:00 IST
சுவையான சத்தான வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:

வேர்க்கடலை - அரை கப்
தேங்காய் துண்டுகள் - 2
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ஒரு ‌டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு ‌டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு ‌டீஸ்பூன்,
புளிக்கரைசல் - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.

• புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.

• பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
• எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

• பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.

Similar News