பொது மருத்துவம்
null

சீர்குலையும் குடல் ஆரோக்கியம்.. உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஆபத்து!

Published On 2025-01-10 12:07 IST   |   Update On 2025-01-10 12:08:00 IST
  • குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது.
  • நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.

பெருகி வரும் வேலை வாழ்க்கையும் அருகி வரும் தனிப்பட்ட வாழ்க்கையும் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் அபாயங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த வாழ்க்கை முறை இளமையையும் உடல்நலனையும் உறிஞ்சிவதாக உள்ளது.

இளைஞர்கள் உட்பட அனைவரின் வேலையும் நாள் முழுவதும் நாற்காலிகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. இது மனம் மற்றும் உடல் ரீதியான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. அதில் ஒன்றுதான் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள்.

நாள் முழுவதும் சேரில் உட்கார்ந்தே இருப்பது, வயிற்று உறுப்புகளை அழுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் தாமதமான குடல் இயக்கங்கள் ஏற்படுகின்றன.

உட்கார்ந்திருக்கும் தொடர் பழக்கம் குடலுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது மற்றும் செரிமான உறுப்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.

சீரில்லாத உட்காரும் முறை, உறுப்பு சீரமைப்பை சீர்குலைக்கிறது. செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வாயு குவிவதற்கு வழிவகுக்கிறது.

கூடுதலாக, கட்டுப்படுத்தப்பட்ட உதரவிதான [diaphragm] இயக்கம் செரிமானத்தை எதிர்மறையாக பாதிக்கும். இந்த வாழ்க்கை முறை மலச்சிக்கல் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற பிரச்சினைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது.

நீடித்த அசைவற்ற தன்மை குடல் பாக்டீரியா சமநிலையையும் பாதிக்கிறது. இது செரிமான செயலிழப்புக்கு வழிவகுக்கிறது. குறைந்த உடல் இயக்கம் ஒரு தேக்கமான சூழலை உருவாக்குகிறது. இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்திறனைக் மட்டுப்படுத்துகிறது. இது உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுதல் மற்றும் குடல் செயல்திறனைத் தடுக்கிறது.

குடல் பாக்டீரியா சமநிலையற்றதாக இருக்கும்போது, செரிமானம் மெதுவாகிறது, கழிவுகளை அகற்றுவது கடினமாகிறது. இரத்த ஓட்டம் குறைவதோடு வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் மலச்சிக்கல் மோசமடைகிறது. சர்க்கரை உணவுகள், மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகள் குடல் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கின்றன.

குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம், ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், மன நல்வாழ்வு மற்றும் எடை ஒழுங்கை பாதிக்கிறது. ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பது, வீக்கத்தைக் குறைப்பது, மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் உற்பத்தி மூலம் மூளையின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்துவது வரை குடல் ஆரோக்கியம் முக்கிய காரணியாகும்.

குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, சீரான உட்காரும் முறையை பயிற்சி செய்யுங்கள், நீரேற்றமாக இருங்கள், மேலும் வெளியின்போது இடைவேளை எடுத்து எடுத்து நடக்க வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து, புரோபயாடிக்குகள் மற்றும் புளித்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், அதே நேரத்தில் சரியான தூக்கம், வழக்கமான, மிதமான உடற்பயிற்சியும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  

Tags:    

Similar News