சமையல்
சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா
- மாலை வேளையில் டீ, காபியுடன் மொறுமொறுப்பான பக்கோடாவை சாப்பிடலாம்.
- இன்று காலிஃப்ளவர் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு -1 கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
காலிஃப்ளவரை நன்றாக கழுவி பூக்களை சிறிதாக உதிர்த்துக்கொள்ளவும்.
கடலை மாவுடன் பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் பக்கோடாவாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.