நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை தோசை
- இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து இருக்கிறது.
- கருப்பு கொண்டக்கடலையில் வெள்ளை கொண்டக்கடலையை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 250 மி.லி
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
* மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
* பின்பு சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து மாவை சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
* சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்