சப்பாத்திக்கு அருமையான தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்யலாம் வாங்க...
- பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
- தினசரி பன்னீர் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 300 கிராம்
ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5
இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
பட்டை
கிராம்பு
பச்சை ஏலக்காய்
கருப்பு ஏலக்காய்
அன்னாசி பூ
பிரியாணி இலை
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கடலை மாவு, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் அடித்த தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து மசாலாவில் கஸ்தூரி மேத்தி, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்..
இப்போது தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.