சமையல்

இனி காலை உணவாக முட்டை அடை தோசை

Published On 2024-03-06 15:58 IST   |   Update On 2024-03-06 15:58:00 IST
  • எல்லோரும் தினமும், இட்லி, தோசை, பொங்கல் தான் சாப்பிட்டு இருப்போம்.
  • கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை?

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் எல்லாரும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பு, முட்டையை வைத்து எப்படி அடை தோசை செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு- 100 கிராம்

பொட்டுக்கடலை- ஒரு கைபுடி

முட்டை- 5

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 2

பச்சை அரிசி- 200 கிராம்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியுடன், பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கொர கொரப்ப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசி கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், முட்டை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவு கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான முட்டை அடை தோசை தயார். இதனை கார சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள். வேண்டுமென்றால் கொத்தமல்லித் தழை அல்லது வெங்காயத்தாள் தூவியும் தோசை வார்க்கலாம். சுவை அட்டகாசமாக இருக்கும்.

Tags:    

Similar News