சமையல்

தித்திப்பான நெய் அப்பம்

Published On 2022-07-08 13:59 IST   |   Update On 2022-07-08 13:59:00 IST
  • தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று நெய் அப்பம்.
  • இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250 கிராம்

தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி

ஏலக்காய் - 4

சமையல் சோடா - ¼ தேக்கரண்டி

வாழைப்பழம் - 1

உப்பு - ¼ தேக்கரண்டி

வெல்லம் - 200 கிராம்

நெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும்.

குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும்.

இப்போது நெய் அப்பம் தயார்.

Tags:    

Similar News