சமையல்

தேன் மிட்டாய் செய்வது எப்படி? வாங்க செய்யலாம்...

Published On 2024-07-01 20:09 IST   |   Update On 2024-07-01 20:09:00 IST
  • 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
  • பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள்.

தேவையான பொருட்கள்:

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

அரிசி – 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 2 கப்

பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – 1 கப்

செய்முறை:

* முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

* பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு மாவாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/4 டீஸ்பூன் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி பொறித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

* இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

* அது நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது சுவையான தேன் மிட்டாய் ரெடி.

Tags:    

Similar News