சமையல்

10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா சப்பாத்தி

Published On 2022-08-02 05:34 GMT   |   Update On 2022-08-02 05:34 GMT
  • இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
  • குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 1

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

ஓமம் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

Tags:    

Similar News