சமையல்

மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல்

Published On 2022-12-21 14:49 IST   |   Update On 2022-12-21 14:49:00 IST
  • மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
  • எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.

தேவையான பொருட்கள்

மட்டன் எலும்பு - முக்கால் கிலோ

வெங்காயம் - 250 கிராம்

தக்காளி - 150 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்

கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்

தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது

உப்பு - தேவைக்கேற்ப

தாளிப்பு

கடுகு - அரை டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, ​​மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.

நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!

இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.

Tags:    

Similar News