சமையல்

டயட்டில் உள்ளவர்களுக்கு அருமையான சிற்றுண்டி

Published On 2023-02-07 05:54 GMT   |   Update On 2023-02-07 05:54 GMT
  • சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு.
  • இந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 1 அல்லது 2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பை தனித்தனியாக போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

விசில் போனவுடன் குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.

இப்போது சூப்பரான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

Tags:    

Similar News