ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
- குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும்.
- வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது.
குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு பட்டர் சிக்கன் சமைக்கப் போறேன்ன்னு மட்டும் சொல்லி பாருங்க. உங்க குழந்தைங்க ரொம்ப ஜாலி ஆயிடுவாங்க. வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது. இது குழந்தைகளோட ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. ஹோட்டல்களில் பிரபலமா உள்ள இந்த பட்டர் சிக்கன் நம்ம வீட்டில் எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
சிக்கன் -500 கிராம்
வெங்காயம்- 2
தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
மல்லி தூள்- ஒரு ஸ்பூன்
தயிர்- ஒரு ஸ்பூன்
சீரக தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
கஸூரி மெத்தி
கொத்தமல்லி இலை
ஃபிரெஷ் கிரீம்- தேவைப்பட்டால்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றான சுத்தம்செய்து எடுத்துகொள்ள வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்
வதக்கியவற்றில் பத்து முந்திரி பருப்பு சேர்த்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து பட்டர் சிக்கன் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கலக்கிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையில் வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு கஸூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மற்றும் எளிமையான பட்டர் சிக்கன் தயார்.