சமையல்

ஷாஹி துக்டா ரெசிபி

Published On 2024-06-30 17:33 IST   |   Update On 2024-06-30 17:33:00 IST
  • குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
  • 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால் – 2 1/2 கப்

பால் பவுடர் – 1/4 கப்

பிரட் – 4

சர்க்கரை – 1/4 கப்

குங்குமப் பூ – 1 சிட்டிகை

சோள மாவு – 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பாதாம் – 10

பிஸ்தா – 10

செய்முறை:

* முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 1/2 கப் பாலினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

* அதனுடன் 1/4 கப் பால் பவுடர், 1/4 கப் சர்க்கரை, 1 சிட்டிகை குங்கும பூ மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூளினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

* அது நன்கு கொதித்த பிறகு அதனுடனே 1 டீஸ்பூன் சோள மாவினை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது ஓரளவு கெட்டியாகி விடும். அதனை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளுங்கள்.

* அடுத்து 4 பிரெட்டுகளின் ஓரங்களை நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யினை ஊற்றி அதில் நாம் ஓரங்களை நறுக்கி வைத்துள்ள பிரெட்டுகளை சேர்த்து நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

* பின்னர் அதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையில் பொரித்த பிரட்டை சேர்த்து அதன் மீது 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

* இப்பொழுது சுவையான ஷாஹி துக்டா தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஷாஹி துக்டா ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.

Tags:    

Similar News