இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
- கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
- மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.
சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.
கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.
சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.
சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.
மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.
தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.