லைஃப்ஸ்டைல்

சுவையான சிக்கன் வித் மஷ்ரூம் சூப்

Published On 2016-07-23 10:17 IST   |   Update On 2016-07-23 10:17:00 IST
சிக்கன், மஷ்ரூம் இரண்டும் சேர்த்து செய்யப்படும் சூப் மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன்  - 200 கிராம்
மஷ்ரூம் - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
சிவப்பு மிளகாய் - 1
வெங்காயத்தாள் - 2
வினிகர் - 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய்  - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
சிக்கன் வேக வைத்த நீர் - 5 கப்

செய்முறை :

* சிக்கனை நன்றாக கழுவிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எலும்பில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும்.

* சிக்கன் வேகவைத்த தண்ணீரை தனியாக வைக்கவும்.

* சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

* மஷ்ரூம், இஞ்சி, வெங்காயத்தாள், மிளகாயை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  

* சிக்கன் வேக வைத்த நீருடன் சோயாசாஸ், வினிகர், இஞ்சி, உப்பு, மிளகாய் மற்றும் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

* அத்துடன் கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி, நறுக்கிய மஷ்ரூமையும் போட்டு வேக விடவும்.

* சூப் நன்கு கொதித்து வரும் போது வேக வைத்த சிக்கன் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் போட்டு சிறு தீயில் வைத்து 8 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News