லைஃப்ஸ்டைல்

தோசைக்கு அருமையான தக்காளி பூண்டு கார சட்னி

Published On 2018-03-01 12:18 IST   |   Update On 2018-03-01 12:18:00 IST
தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி பூண்டு கார சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தக்காளி - 5
சிவப்பு மிளகாய் - 8 முதல் 10 வரை
பூண்டு - 12 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க



செய்முறை :

தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

அடுத்து பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த அரைத்த சட்டியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

சூப்பரான தக்காளி பூண்டு கார சட்னி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News