லைஃப்ஸ்டைல்
இறையுணர்வை அருளும் அழகிய டெம்பிள் ஜூவல்லரி
தனித்தன்மை நிறைந்த அற்புத செதுக்கல்களும், நுணுக்க வேலைப்பாடுகளும் கைநேர்த்தியுடன் காண்பவரும், அணிபவரும் ஓர் தெய்வீக அனுபவத்தை பெறும் வகையில் டெம்பிள் ஜூவல்லரி திகழ்கிறது.
கண்கவரும் சிற்பங்களை தாங்கி நிற்கும் கோவில்களை கலைகோவில் என்போம். அந்த கலை கோவில்களில் தூண்களில் இருக்கும் அற்புத சிற்ப வடிவங்களை நாம் அணிய ஏற்ற நகையாய் வடிவமைத்து தருகின்றனர். இந்நகைகள் டெம்பிள் ஜூவல்லரி என்று கூறப்படுகிறது.
தூய தமிழில் கோவில் நகைகள். கலை சிற்பங்களில் பிறப்பிடமாய் திகழும் கோவில்களின் முக்கிய சிற்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டலும் அந்நகைகள் இறைவன் அருளும் கோவில்கள் போன்றே திகழ்வதாய் இப்பெயர் பெற்றது எனலாம். தனித்தன்மை நிறைந்த அற்புத செதுக்கல்களும், நுணுக்க வேலைப்பாடுகளும் கைநேர்த்தியுடன் காண்பவரும், அணிபவரும் ஓர் தெய்வீக அனுபவத்தை பெறும் வகையில் டெம்பிள் ஜூவல்லரி திகழ்கிறது.
டெம்பிள் ஜூவல்லரியின் தனித்தன்மை பழமையும் பாரம்பரியமும் தான். அவை இரண்டும் இன்றைய நவீனத்துடன் புது மெருகூட்டப்பட்டு அனைத்து மங்கையரும் அணிய ஏற்ற வகையில் உலகமே வியக்கும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. அழியாத அற்புத சிற்பங்களை பொன் நகையில் அணியும் அனைவரும் கலையின் வடிவமாய் திகழ்கின்றனர்.
அன்னபட்சி அணிவகுக்கும் மீனாட்சி மாலை....
மதுரையை ஆளும் மீனாட்சியை தங்க மாலையில் பதங்கமாய் நடுவில் பதித்து இரு புறமும் அழகிய அன்னபட்சிகள் அணிவகுக்கும் அற்புத மாலை. அதே வடிவில் தங்க சிலையாய் தளிர் நிறை பொன்மேனியாய் நிற்கின்றாள். கையில் கிளியுடன் தாமரை பீடத்தில் நிற்கும் மாலையணிந்து நிற்க அதனை சுற்றியாளியுடன் கூடிய பீடம் என்று மீனாட்சியம்மை ஓய்யாரமாய் நிற்கிறார். அவளை சுற்றி கீழ் புறத்தில் மணிகள் தொங்க தாமரை பீடத்தில் கீழ் அழகிய தங்க கிளி ஒன்று சிறகு விரிந்து தொங்குகிறது. பதக்கத்தை தாங்கும் மாலை இருபுறமும் ஆறு, ஆறு அன்னபட்சிகள் நுணுக்கமான கலை வேலைப்பாட்டுடன் உள்ளது.
மீனாட்சி அருளை பெற நினைப்போர் அவள் உருவம் தாங்கிய மாலையை அணியும் போது பெறுவதுடன் பார்த்து ரசிப்பவருக்கும் அவள் அருளை பெற உதவலாம்.
இரட்டை மயிலுடன் மகாலட்சுமி பதக்க மணி மாலை....
தங்க மணிகளும் தங்க ருத்ராட்ச மணிகளும் இணைந்த மணிமாலை அதன் நடுவே முத்துகீரிடம் தரித்த கணபதி மயிலை ஊஞ்சலாக கொண்டு தரிசனம் தருகிறார். கண்கவரும் வடிவில் கணபதி சற்றே சாய்ந்தவாறு முத்து பதித்த சிறுமாலை, முத்து அரைஞாண் கயிறு, முத்து கும்பம் என்றவாறு அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. மயில் ஊஞ்சல் வடிவில் பெரிதாக உடற்புறம் முழுவதும் தங்கமாயும், தோகை வெள்ளை முத்துகளாலும் உள்ளது. அதன் கீழே முத்து பதித்த பெரிய தங்க உருளைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
டெம்பிள் ஜூவல்லரி என்பது கலை பொக்கிஷ கடல் அதில் உருவாகும் நகைகள் எல்லாமே அமிர்தம் போன்றவையே. அதனை எக்காலத்திலும் பாதுகாத்து தலைமுறை தலைமுறையாய் வழங்கிட வேண்டும்..