லைஃப்ஸ்டைல்
உறவுகளிடம் உரையாட கை கொடுக்கும் ‘வீடியோ கால்’

உறவுகளிடம் உரையாட கை கொடுக்கும் ‘வீடியோ கால்’

Published On 2020-04-21 09:24 IST   |   Update On 2020-04-21 09:24:00 IST
ஊரடங்கால் சூழ்நிலை கைதியாக தவிர்ப்போர், குடும்பத்தினருடன் உரையாடுவதற்கு ‘வீடியோ கால்’ உதவுகிறது.
பணி நிமித்தமாக அண்டை மாநிலங்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சென்னையில் வசிக்கிறார்கள். ‘எப்போது லீவு கிடைக்கும்? சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்’ என்ற மனநிலையில் இருக்கும் அவர்களுக்கு கொரோனாவால் தொடர் விடுமுறை கிடைத்து இருக்கிறது.

இந்த விடுமுறை அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. மாறாக சோகத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்கால் எங்கும் நகர முடியாததால் குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் சூழ்நிலை கைதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை சந்திக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே அகதி போன்று வாழும் நிலைக்கு ‘கொரோனா’ மக்களை தள்ளி உள்ளது.

கொரோனா எனும் கொடிய வைரஸ் வேகமாக பரவும் சூழ்நிலையில் குடும்பத்தினரை அருகில் இருந்து கவனித்து கொள்ள முடியாமல் பரிதவிப்போருக்கு செல்போன் உரையாடல்தான் ஆறுதலாக அமைகிறது. மனைவி, குழந்தைகள், பெற்றோர்களை நேரில் பார்க்க முடியாமல் வேதனை அடைவோருக்கு செல்போன் ‘வீடியோ கால்’ மன நிம்மதியை அளிக்கிறது.

எனவே தினமும் பலர் வீடியோ காலில் குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் நேரத்தை செலவழிக்கிறார்கள். முகம் பார்த்து பேசி உணர்ச்சி வசம் அடைகிறார்கள்.

ஊரடங்கால் குடும்பத்தினரை போய் பார்க்க முடியாமல் தனித்திருக்கும் ஆண்களுக்கு, ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகம் போன்று கடக்கிறது என்று சொன்னால் அது மிகையாகது.

Similar News