செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: செப்டம்பரில் தேர்தல் தேதி அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னை:
தமிழ்நாட்டில் 12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 12 ஆயிரத்து 527 ஊராட்சி ஆகிய ஊராட்சி அமைப்புகள் உள்ளன.
இந்த அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் கடந்த மாதமே தொடங்கி விட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு ரூ.183 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் இந்த தடவை முதன் முதலாக பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெண்கள் போட்டியிடுவதற்கான வார்டுகளை பிரிக்கும் பணியும் அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. என்றாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் முறையில் வேறுபாடு உள்ளதால் அதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை இட மாற்றம் செய்வதற்கான பட்டியலும் தயாராகி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 25 சதவீதம் ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் உள்ளனர்.
அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான 90 சதவீதம் பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
தற்போது தமிழக சட்ட சபை கூட்டத் தொடர் தொடங்கி இருப்பதால் தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது. செப்டம்பர் 2-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிகிறது.
அதன் பிறகு செப்டம்பர் முதல் வாரமே தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் 2-வது வாரம் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. கடந்த தடவை போல இந்த தடவையும் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.