செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு மறுப்பதா?- கி.வீரமணி அறிக்கை

Published On 2016-10-03 13:52 IST   |   Update On 2016-10-03 13:52:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பதா என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது மத்திய அரசால், நாடாளுமன்றத்தால் அரசியல் சட்டப்படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, மத்திய அரசினால் கெசட் செய்யப்பட்ட ஒன்று.

தற்போதைக்கு அது இயலாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியது அசாதாரணமானது.

மத்திய அரசு இதனை ஏற்க இப்போது மறுப்பதன்மூலம், அரசியல் சட்டத்தின் கடமைகளைச் செய்யத் தவறும் ‘‘முதல் குற்றத்தை’’ அதுவே செய்ததாகாதா?

இது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் விரோதமான போக்கு அல்லவா? தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைக்கும் பச்சை துரோகம் ஆகும்.

மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் அது வேலியே பயிரை மேயும் படு மோசமான, வன்மையான கண்டனத்திற்குரிய போக்காகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News